புதுடெல்லி: மூன்று வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில், விமானத்தில் வழங்கப்படுவதைப் போன்று தரமான உணவு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி), விமானப் பயணங்களில் வழங்கப்படும் உணவைப் போன்று, தரமான உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பை – பெங்களூரு, ஹவுரா – காமாக்யா, டெல்லி – வாராணசி ஆகிய 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வழித்தடங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “காமாக்யா வழித்தடத்துக்கு மேபேர் குழுமத்துடனும், ஹவுரா வழித்தடத்துக்கு தாஜ் சாட்ஸ் நிறுவனத்துடனும், மும்பை வழித்தடத்துக்கு சரோவர் போர்டிகோகுழுமத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், விமான நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு உணவு வழங்கும் பிரத்யேக சமையல் மையங்களும் நியமிக்கப்பட்டுள்ளன” என்றனர்.
புதிய உணவுப் பட்டியல் மும்பை – பெங்களூரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் காலை உணவாக, சட்னி மற்றும் சாம்பாருடன் இட்லி, வடை அல்லது அவல் அல்லது உப்புமா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும். மதிய உணவு மற்றும் இரவு உணவில் சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் சிக்கன் அல்லது சைவ உணவு வகைகளில் ஏதேனும் ஒன்று இடம்பெறும். மேலும், ஒரு வேளை உணவின் மொத்த எடை 750 கிராமிலிருந்து 500 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

More Stories
தங்கம் விலை மீண்டும் உயர்வு: 2 நாட்களில் ரூ.1,440 அதிகரிப்பு
ஜிமெயில் போல வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை – இன்றைய சந்தை நிலவரம் என்ன?