புதுடெல்லி: தனது கோரிக்கையை ஏற்று, 28 நாட்களுக்கு பதில் 30 நாட்கள் வேலிடிட்டி யுடன் கூடிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்திருப்பதற்கு மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகவ் சத்தா கூறியதாவது: புதிய டெலிகாம் நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 30 நாள் ரீசார்ஜ் திட்டங்கள், ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப பல வசதிகளை வழங்கும்.
குறிப்பாக, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டுமே பயன்படுத்துவோருக்கும், டேட்டா தேவையில்லாத குறைந்த பட்ஜெட் நுகர்வோருக்கும் இது பெரும் பலனளிக்கும்.
முன்னதாக, 28 நாட்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்ததால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் நிதிச்சுமை இருந்தது. இந்த புதிய 30 நாள் திட்டங்களால், ஆண்டுக்கான ரீசார்ஜ் எண்ணிக்கையை 13-லிருந்து 12 ஆகக் குறையும். நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்பியதன்பேரில், நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசுக்கும், டிராய் அமைப்புக்கும் நன்றி. இவ்வாறு ராகவ் சத்தா கூறினார்.

More Stories
ஹரியானா: அம்பாலாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு
உ.பி.யில் 60 மணி நேர தொடர் மழையால் 56 பேர் உயிரிழப்பு, 1000 வீடுகள் சேதம்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு