March 19, 2026

தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.     தேனி, மார்ச் 18,தேனி மாவட்டம் போடி, கம்பம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                                                           தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொதுதேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமபாளையம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம் ஆகிய அலுவலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்கள் சி.சி.டி.வி.கேமரா பொருத்தும் பணி, மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு வைப் பறை மற்றும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் தகவல்களை அறிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் டெலிபோன் செயல்பாடுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பணிகள் தொய்வின்றி நடைபெற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 



Spread the love