ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை!
புதுடெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை அளித்தார்.
இது குறித்து பிரதமர் பேசும்போது, “ மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன; அவற்றில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது தனித்துவமான பங்கை ஆற்றியுள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், தேவ கவுடா ஆகியோர் தங்கள் வயதில் அதிக நாட்களை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்துள்ளனர். தங்களின் அனுபவத்தைக் கொண்டு சமுதாயத்திற்கு சேவையாற்ற அடுத்த கட்ட பயணத்தில் அடியெடுத்து வைக்க உள்ளனர். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது.
தங்கள் பதவிக்காலம் முடிந்து இம்மன்றத்தை விட்டு விடைபெறும் தலைவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இது போன்ற தருணங்களில், கட்சி எல்லைகளைக் கடந்து ஒற்றுமை உணர்வுடன் நாம் ஒன்றிணைகிறோம். அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் அனுபவமும், பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
வழிபாடு என்பது மதச்சலுகை அல்ல, அடிப்படை உரிமை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம்
12-வது தேசிய கைத்தறி நாள் விழா: கலைவாணர் அரங்கில் சிறப்புக் கண்காட்சி – முதல்வர் விஜய் பங்கேற்பு
கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுதினம் முன்னிட்டு 500 தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு காலை உணவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்