சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் நியமிக்கப்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் எனப் பள்ளிக்கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி, கருணை அடிப்படை, பணி மாறுதல் உள்ளிட்ட முறைகளில் நியமிக்கப்பட்டவர்களின் தகுதிகாண் பருவத்தை, துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலவரம்புக்குள் தேர்ச்சி பெறாதவர்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, பணியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து பணியில் அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை ரத்து
“முருகனுடன் முதல்வர் விஜய்யை நான் ஒப்பிடவில்லை” – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சொத்து ஆவணங்கள் இனி தபாலில்! தமிழக அரசு