August 27, 2026

6,000 கி.மீ. பயணத்தை நிறைவு செய்த ஹைட்ரஜன் ரயில்!

புதுடெல்லி: சமீபத்​தில் அறி​முகம் செய்​யப்​பட்ட நாட்​டின் முதல் ஹைட்ரஜன் ரயில் 6 ஆயிரம் கிலோமீட்​டர் பயணித்​து, 36,444 கிலோ கார்பன் டை ஆக்சைடு உமிழ்​வைக் குறைத்​துள்​ளது.

இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி கடந்த மாதம் கொடியசைத்​துத் தொடங்கி வைத்​தார். 10 பெட்டிகளைக் கொண்ட இதில் 2,600 பேர் பயணிக்க முடி​யும். ஹரியா​னா​வின் ஜிந்த் மற்​றும் சோனிபட் இடையே இயங்​கு​கிறது. இது தற்​போது செயல்​பாட்​டில் உள்ள மிக நீள​மான ஹைட்​ரஜன் ரயில் ஆகும். 3,200 ஹெச்பி உந்​து​விசை அமைப்​புடன், உலகில் உள்ள மிக சக்​தி​ வாய்ந்த ஹைட்​ரஜன் ரயில்​களில் இது​வும் ஒன்றாகும்.

மிகத் தூய்​மை​யான எரிபொருளாகக் கருதப்​படு​வ​தால் ஹைட்ரஜன் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில்​கள் சத்​தமின்றி இயங்​கு​கின்​றன.

பூஜ்ஜிய உமிழ்வை உரு​வாக்​கு​கின்றன மற்​றும் டீசலை சார்ந்​திருக்​கும் நிலை​யைக் குறைக்க முடி​யும். இந்த ரயில் ஒவ்​வொரு நாளும் புதிய மைல்கற்களை எட்டி வரு​கிறது. இது​வரை சுமார் 6,000 கிலோமீட்டர் தூரப் பயணத்தை நிறைவு செய்​துள்​ளது.

வரும் 2030-க்​குள் நிகர-பூஜ்ஜிய கார்​பன் டை ஆக்​சைடு உமிழ்வை அடைய வேண்​டும் என்று இந்​தியா இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாகத்​தான் ஹைட்​ரஜன் ரயில் அறி​முகம் செய்யப்​பட்​டுள்​ளது. இந்த புதிய ரயில் ஒரு துணைப் பொருளாக நீரா​வியை மட்​டுமே வெளி​யிடு​கிறது.

இதனால் தூய்​மை​யான எரிபொருள் தொழில்​நுட்ப ரயி​லாக இது விளங்​கு​கிறது. வழக்​க​மான டீசல்​-எலக்ட்​ரிக் வாக​னம் (DEMU) பயணிக்​கும் ஒவ்​வொரு கிலோமீட்​டருக்​கும் தோராய​மாக 6.074 கிலோ கார்​பன் டை ஆக்​சைடு (CO2) உமிழ்வை உரு​வாக்​கு​கிறது. இந்​நிலை​யில், ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் இது​வரை சுமார் 36,444 கிலோ CO2 உமிழ்​வைக் குறைக்​க வழி​வகுத்​துள்​ளது குறிப்பிடத்​தக்​கது.

Spread the love