ஒட்டன்சத்திரம் ஜூன்.17
தமிழ்நாடு அரசின்
பள்ளிக்கல்வித்துறை நாட்டு நலப்பணி திட்டம் திண்டுக்கல் மாவட்டம், மற்றும் இந்திய மருத்துவக்கழகம் ஒட்டன்சத்திரம் சார்பாக ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இரத்ததானம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், வினாடி வினா போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமொழி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் காளிமுத்து முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.சரவணக்குமார் வரவேற்றுப்பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.ஆசைத்தம்பி கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை விளக்கி கூறினார். இதில் வினாடி வினா போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. முடிவில் பள்ளியின் வேதியியல் முதுகலை ஆசிரியர் ராஜூ நன்றி கூறினார். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கணித முதுகலை ஆசிரியர் சரவணவேல், என்.சி.சி அலுவலர் பால்பாண்டி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

More Stories
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில்
தேனி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் சரகத்தில் (16.06.2026) அன்று இலட்சலபட்டி கிராமத்தில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவ இடத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு இக்கொள்ளை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்.