June 25, 2026

நாளை கோவாவில் நடக்கும் குஷ்பு மகள் திருமணம்: 25 பேர் மட்டுமே பங்கேற்கிறாங்க, ஏன்னா…

அவந்திகா சுந்தர், ஷ்ரவன் சீனிவாசனின் திருமணம் நாளை கோவாவில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் திருமணத்தில் மொத்தமே 25 பேர் தான் கலந்து கொள்கிறார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்:

  • நாளை திருமதி ஷ்ரவனாகும் குஷ்பு மகள்
  • கோவாவில் நடக்கும் அவந்திகா திருமணம்
  • பிரபலங்களை அழைக்காததற்கு காரணம் உள்ளது
avantika sundar wedding date
avantika sundar wedding date(புகைப்படங்கள்- Samayam Tamil)

அவந்திகா கல்யாண தேதி: குஷ்பு, சுந்தர் சி.யின் அன்பு மகள் அவந்திகாவும், சென்னையை சேர்ந்த மெர்சன்ட் நேவி ஆபீஸர் ஷ்ரவன் சீனிவாசனும் காதலிக்க ஆரம்பித்தார்கள். காதலை வீட்டில் சொல்லவே இரு குடும்பத்தாரும் சேர்ந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். குஷ்பு தன் மகள், மருமகனுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பத்திரிகை வைத்தபோது தான் அவந்திகாவுக்கு கல்யாணம் என்பதே சினிமா ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

  

பத்திரிகை கொடுத்தபோதிலும் திருமண தேதி தெரியவில்லை. இந்நிலையில் தான் ஜூன் 25ம் தேதி அதாவது நாளை தான் குஷ்பு மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணம் சென்னையில் இல்லை கோவாவில் நடக்கிறது. அந்த காதல் திருமணத்தில் இரு வீட்டாரையும் சேர்த்தே 25 பேர் கலந்து கொள்கிறார்களாம்.

கோவாவில் குஷ்பு: அவந்திகா சுந்தருக்கு கூட்டம் என்றால் பிடிக்காதாம். அதனால் பேசாமல் ஷ்ரவன், அவங்க அப்பா அம்மா, நாம் மட்டும் போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் அம்மா என்றாராம். நீ எங்களுக்கு மூத்த மகள், இது நம் வீட்டு முதல் திருமணம். அது எப்படி யாருக்கும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்வது என்றார்களாம் குஷ்புவும், சுந்தர் சி.யும். தங்களின் சந்தோஷத்திற்காக மகளின் திருமணத்தை கோவாவில் நடத்துகிறார்களாம்.

கோவாவில் நடத்துவது எல்லாம் சரி, ஆனால் கூட்டம் கூட்டக் கூடாது என்று கறாராக கூறினாராம் அவந்திகா சுந்தர். அதனால் தான் சினிமா, அரசியலில் அனைவருக்கும் தெரிந்தவர்களாக இருந்தும் கூட மகளின் கல்யாணத்துக்கு வாங்க என்று யாரையும் அழைக்கவில்லையாம்.

விஜய் வருவாரா?: பிரதமருக்கு மட்டும் அல்ல தமிழக முதல்வர் விஜய்க்கும் குடும்பத்துடன் அழைப்பிதழ் கொடுத்தார்கள். விஜய்யை அவர் வீட்டில் சந்தித்து அழைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார் குஷ்பு சுந்தர். அதனால் நாளைய திருமணத்தில் விஜய் கலந்து கொள்வாரா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி அவர் கலந்து கொண்டால், முதல்வரான பிறகு பங்கேற்கும் முதல் திருமணம் இது தான்.நாளை சட்டசபையும் இல்லை. அதனால் அக்கா குஷ்பு வீட்டு கல்யாணத்தில் விஜய்ணா கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்வார் என்றே ரசிகர்கள் நம்புகிறார்கள்.

படித்து முடித்த பிறகு நடிக்க வந்த கையோடு திருமணம் செய்து கொள்கிறார் அவந்திகா. நான் உங்களின் பெயரை பயன்படுத்தாமல் சொந்த முயற்சியில் தான் நடிகையாவேன் என்று பெற்றோரிடம் கூறினார். தானாக முயன்று ஆரம்பம் படம் மூலம் ஹீரோயினாகிவிட்டார்.

கெரியர், லைஃப்: இதையடுத்து பவிஷ் நாராயண் அதாங்க தனுஷ் மருமகனுடன் சேர்ந்து அட்டாக்கர் படத்தில் நடிக்கிறார் அவந்திகா. ஸ்போர்ட்ஸை அதுவும் கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்தில் குஷ்பு மகளுக்கு வெயிட்டான கதாபாத்திரமாம். முதல் தமிழ் பட அறிவிப்பு வெளியாகும் முன்பே திருமண அறிவிப்பு வந்தது ரசிகர்களை வியக்க வைத்தது.ஆனால் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்வது நல்லது தான். குஷ்பு மகள் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.
விஜய்ணா சந்தோஷத்திற்கு காரணமான த்ரிஷாவுக்கு மில்லியன் தேங்ஸ்: தளபதி ரசிகர் ஹேப்பி ட்வீட்அண்மையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா தன் போல்டான பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதிலும் குறிப்பாக விஜய்யை முதல் முறை பார்த்தபோது மயங்கி விழுந்ததாக அவர் சொன்ன விஷயம் வைரலானது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அது மட்டும் அல்ல தான் ஆண்டுக் கணக்கில் முயற்சி செய்து எடையை குறைக்க ஓசம்பிக் ஊசி போட்டதாக எளிதில் விமர்சிக்கிறார்கள் என்று தன்னை விளாசியவர்களுக்கு பதிலடி கொடுத்தார் அனந்திதா என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love