2026-06-26
நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலருக்கும் பிபிஎஃப் (PPF) கணக்கு இருப்பது வழக்கம். அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி. தனது இணையதளத்தில் சில முக்கிய சேவைகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்போவதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது.
மென்பொருள் மற்றும் தரவுத்தளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காகவே இந்தத் தற்காலிகச் சேவை முடக்கம் மேற்கொள்ளப்படுகிறது. தகவல்களின்படி, ஜூன் 26 நள்ளிரவு முதல் ஜூன் 28 இரவு 11:59 மணி வரை, பிஎஃப் கோரிக்கைகள் (claims) தொடர்பான சேவைகள் இபிஎஃப்ஓ இணையதளத்தில் கிடைக்காது. ஜூன் 29 முதல் அனைத்து சேவைகளும் வழக்கம்போலவும், இன்னும் வேகமாகவும் செயல்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

More Stories
திருவண்ணாமலை தீப விழா: தரிசனத்துக்கு பக்தர்கள் வரம்பு!
பெண் அதிகாரிகளின் ஆளுமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம்
குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகளித்து, வெற்றி வானில் உலா வரச் செய்வோம்: முதல்வர் விஜய் வாழ்த்து