February 7, 2026

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் தைத்​தேர் உற்​சவத்தை முன்​னிட்டு நம்​பெரு​மாள் நேற்​றிரவு நெல்​லளவு கண்​டருளி​னார். ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் பூப​தித் திரு​நாள் எனப்​படும் தைத்​தேர் உற்​சவம் ஜன.23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

அன்று மாலை முதல் தினந்​தோறும் பல்​வேறு வாக​னங்​களில் உபய​நாச்​சி​யார்​களு​டன் நம்​பெரு​மாள் எழுந்​தருளி உத்​திர வீதி​களில் வலம் வந்​தார். இந்​நிலை​யில், நேற்​றிரவு திருக்​கொட்​டாரத்​தில் நம்​பெரு​மாள் எழுந்​தருளி நெல் அளவு கண்​டருளி​னார். இதில் பக்​தர்​கள் திரளானோர் பங்​கேற்று தரிசனம் செய்​தனர்.

தொடர்ந்​து, நம்​பெரு​மாள் தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி வையாளி கண்​டருளும் வைபவம் இன்று (ஜன.30) நடை​பெறுகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான தை தேரோட்​டம் நாளை (ஜன.31) காலை நடை​பெறுகிறது.

தொடர்ந்​து, பிப்​.1-ம் தேதி சப்​தாவரணம் நிகழ்ச்​சி​யும், நிறைவு நாளான பிப்​.2-ம் தேதி நம்​பெரு​மாள் ஆளும் பல்​லக்​கில் எழுந்​தருளி உள்​வீ​தி​களில் வலம் வரும் நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

Spread the love