July 17, 2026

பழனி முருகன் கோவில் ரூ 100 கோடி  நில மோசடி வழக்கு

  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது 

பழனி ஜூலை 16 

பழனி முருகன் கோவில் நூறு கோடி நிலம் மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது

 பழனி முருகன் மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமாக 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை தற்பொழுது பழனி முருகன் கோவில் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மேற்கண்ட 1.40ஏக்கர் நிலத்தை சேதுபதி வெள்ளத்துரை ஆகியோர் கிரையம் செய்துள்ளனர். இது பற்றிய செய்தி  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் பழனி சார் பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை விற்பனை செய்த  விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் மற்றும் எழுதி வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி  டி கே என் புதூர்  சேதுபதி உள்பட நான்கு பேர் மீதுமோசடி சதி செய்தல்,  உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கு இடையே இந்த சம்பவம் தொடர்பாக சி பி சி ஐ டி போலீசாருக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார் அதன்படி இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி போலீஸ் சார் விசாரிக்கின்றனர்

Spread the love