பெருந்தலைவர் காமராஜர்பிறந்த நாள் விழா. ஆண்டிபட்டி, ஜூலை 17, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி லிட்டில் ஃப்ளவர் பள்ளியின் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளித் தாளாளர் திரு. ஹென்றி அருளானந்தம் அவர்கள் பேரணிக்கு தலைமை தாங்கினார். பேரணியைப் பள்ளிச் செயலர் தமயந்தி ஹென்றி அருளானந்தம் பச்சைக்கொடி அசைத்து துவங்கி வைத்தார். பேருந்து நிலையம் அருகில் பள்ளி மாணவர்கள் காமராஜரைப் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசினர். ஆண்டிபட்டி சப்.இன்ஸ்பெக்டர் இரஞ்சித் காமராஜரின் நற்பண்புகளை எடுத்துரைத்தார். பள்ளிச் செயலாளர் மேத்யூ ஜோயல் காவல்துறை அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பள்ளி மாணவர்கள் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். பள்ளி ஆசிரியர்கள், விழா கமிட்டியினர்,விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெருந்தலைவர் காமராஜர்பிறந்த நாள் விழா

More Stories
31-08-2026
த.வெ.க.சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் இருப்பவர்களுக்கும் பாரபச்சம் இல்லாமல் பதவிகள் வழங்கப்படும் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் R. P.ரமேஷ் பேட்டி.