July 17, 2026

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்ததது. இதற்கிடையில் கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்திருந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று அதிகரித்தது.

அதாவது கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,180க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,440க்கும் விற்பனையானது. இதையடுத்து நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,200க்கும் விற்றது. வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று மாற்றம் ஏதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனையாகிறது.

Spread the love