இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்குப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ) ஜாகிர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ எடையுள்ள செயற்கை போதைப் பொருள் (கிரிஸ்டல் மெத்த பெட்டமைன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More Stories
ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
நாடாளுமன்ற தொடர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு தகவல் இல்லை: பிரியங்கா காந்தி விளக்கம்
சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு: ஆர்எஸ்எஸ், இந்துத்துவா ஆட்சிக்கு மிரட்டல்