சென்னை: சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் வரும் ஆகஸ்ட் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம், எஸ்ஏஎன் அகாடமி பள்ளிகள் குழுமம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தொடக்க நாள் மட்டும் வீரர், வீராங்கனைகளுக்கு காலை உணவும், மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடரில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் தகுந்த சான்றிதழ்களுடன் வரும் 30-ம் தேதிக்குள் போட்டி அமைப்பாளர்களை அணுகலாம். இத்தகவலை சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.

More Stories
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை
மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி