July 28, 2026

டி20 போட்டி தரவரிசை: இந்திய அணி மீண்​டும் முதலிடம்

துபாய்: சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி தரவரிசை​யில் இந்திய அணி அதிக புள்​ளி​களைப் பெற்று மீண்​டும் முதலிடத்​தைப் பிடித்துள்​ளது.

சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் அணி​களின் தரவரிசைப் பட்​டியலை நேற்று வெளியிட்​டுள்​ளது. அதில் இந்​திய அணி மீண்​டும் முதலிடத்​தைப் பிடித்​துள்​ளது. ஜிம்​பாப்வே அணி​யுட​னான சர்​வ​தேச டி20 தொடரில் இந்​திய அணி 2-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த முதலிடத்​துக்கு இந்​திய அணி மீண்​டும் வந்​துள்​ளது.

இந்​தத் தரவரிசை​யில் டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் உலக சாம்பியனான இங்​கிலாந்து அணி முதலிடத்​திலிருந்து 2-வது இடத்துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. 3-வது இடத்​தில் ஆஸ்​திரேலி​யா​வும், 4-வது இடத்​தில் நியூஸிலாந்​து, 5-வது இடத்​தில் தென் ஆப்​பிரிக்கா​வும் உள்​ளன.

இந்த வரிசை​யில் 6-வது இடத்​தில் பாகிஸ்தானும், 7-வது இடத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணியும், 8-வது இடத்​தில் வங்​கதேச​மும், 9-வது இடத்​தில் இலங்கை​யும், 10-வது இடத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணி​யும் இருக்கின்​றன.

இஷான் கிஷன் முதலிடம்: டி20 கிரிக்​கெட் போட்​டி​யின் பேட்​ஸ் மேன்​கள் தரவரிசை​யில் இந்​திய வீரர் இஷான் கிஷன் 892 புள்ளிகள் பெற்று முதலிடத்​தில் இருக்​கிறார். அவருக்கு அடுத்​த​படி​யாக இந்​திய வீரர் அபிஷேக் சர்மா 858 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தைப் பிடித்​துள்​ளார். இந்​திய வீரர் திலக் வர்மா 733 புள்ளிகளு​டன் 8-வது இடத்​தைப் பெற்​றுள்​ளார்.

இந்த வரிசை​யில் பாகிஸ்​தான் வீரர் சாஹிப்​சதா பர்​ஹான் 3-வது இடத்​தி​லும், இங்​கிலாந்து வீரர் பில் சால்ட் 4-வது இடத்​தி​லும், இலங்கை வீரர் பதும் நிசங்கா 5-வது இடத்​தி​லும், இங்​கிலாந்து வீரர் ஜாஸ் பட்​லர் 6-வது இடத்​தி​லும், இங்​கிலாந்து கேப்​டன் ஹாரி புரூக் 7-வது இடத்​தி​லும் உள்​ளனர். ஜிம்​பாப்வே வீரர் பிரையன் பென்​னட் 9-வது இடத்​தி​லும், ஆஸ்​திரேலிய வீரர் மிட்​செல் மார்ஷ் 10-வது இடத்​தை​யும் பெற்​றுள்​ளனர்.

Spread the love