July 30, 2026

லாஞ்சியடி பெண்கள் அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா லாஞ்சியடி கிராமம் சிங்காரவேல்நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாததால் மீனவ குடும்பங்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அரசு வளர்ச்சிப் பணிகளுக்கு சிலர் இடையூறு விளைவிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love