பழனி பிப்ரவரி 4
பழனி டு ஈரோடு ரெயில்வே பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி கோரிக்கை. பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் சாமிநாதன். அவருக்கு காமராஜர் தேசிய பேரவை மற்றும் காங்கிரஸ் நகர வட்டார மேற்கு மண்டல கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு தனியார் மண்டபத்தில் மாவட்டத் தலைவர் சாமிநாதனுக்கு அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகரத் தலைவர் முத்து விஜயன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எம் முருகானந்தம், மண்டல தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பழனி டு ஈரோடு ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காமராஜர் தேசிய பேரவை நிர்வாகி பாப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் சுந்தர், சிறுபான்மை பிரிவு முகமது அலி, ராமநாத கிருஷ்ணன், கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், எஸ்.சி.பி.பாலக்குமார், எஸ்.சி.எஸ்.டி பிரிவு குப்புசாமி, ஆகியோர் உள்பட ஏராளமான பங்கேற்றனர்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி