ஒட்டன்சத்திரம், ஆக-6
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர். தொல். திருமாவளவன், எம்.பி., புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு செய்துள்ளார். அதன்படி ஒட்டன்சத்திரம் நகரச்செயலாளராக சத்திரப்பட்டி க. ரவிபாரதி, ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக க. மாதவன், மேற்கு ஒன்றியச்செயலாளராக ஆ.வித்யசாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலச்செயலாளர் வழக்கறிஞர். வி.ஜான்சன்கிறிஸ்டோபர், மாவட்டச்செயலாளர் க.திருவளவன், மண்டல துணைச்செயலாளர்கள் வழக்கறிஞர்.சி.குமாரசாமி, ஜலால் முகமது ஆகியோரின் பரிந்துரை அடிப்படையில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்