August 7, 2026

பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்  

பழனி ஆகஸ்ட் 7 

பழனியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் படத்துடன் இருந்த பதாகையை, தமிழக வெற்றி கழகம் கட்சியினர் அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பழனி திமுக சார்பில் நகரச் செயலாளர் வேலுமணி தலைமையில், தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மீது  நடவடிக்கை எடுக்க கோரி. புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் நகர் மன்ற மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைச் செயலாளர் ஏ கே எம் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரபாண்டியன், சாமிநாதன், பேரூர் செயலாளர்கள் அபுதாஹிர், சின்னத்துரை, காளிமுத்து மற்றும் கவுன்சிலர்கள் இந்திரா திருநாவுக்கரசு, காளீஸ்வரி பாஸ்கரன், உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்

Spread the love