August 14, 2026

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணி தீவிரம்: ஐந்தாவது நடைமேடை வரை மூடல்

சென்னை: எழும்​பூர்​ ரயில்​ நிலை​யத்​தின்​ நடை மேம்​பாலப்​பணி காரண​மாக, 1 முதல்​ 5-வது நடைமேடை வரை மூடப்பட்​டுள்​ளது. சில ரயில்கள் தாம்​பரத்​துக்​கு இடமாற்​றம்​ செய்​யப்​பட்​டுள்​ளன.

சென்னை எழும்​பூர்​ ரயில்​ நிலை​யத்​தில்​ ரூ.734.91 கோடி​யில்​ மறுசீரமைப்​பு பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதன்​ ஒரு பகு​தி​யாக, பிரம்​மாண்​ட நடை மேம்​பாலம்​ அமைக்​க முதல்​கட்​ட பணி​கள்​ பிப்​ர​வரி​யில்​ தொடங்​கியது.

இதையடுத்​து, விரைவு, மின்​சா​ர ரயில்​ சேவை​கள்​ மாற்​றப்பட்​டன. தற்​போது 2-ம்​ கட்​ட​மாக, இரும்​பு நடை மேம்​பாலம்​ அமைக்​கும்​ பணி நடை​பெறுகிறது. இதற்​காக, எழும்​பூர்​ ரயில்​ நிலை​யத்​தின்​ 1 முதல்​ 5-வது நடைமேடை வரை மூடப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, சில விரைவு ரயில்​கள்​ தாம்​பரத்​துக்​கு மாற்​றப்​பட்​டுள்​ளன. இது குறித்​து, தெற்​கு ரயில்​வே அதி​காரி​கள்​ கூறிய​தாவது: எழும்​பூர்​ ரயில்​ நிலை​யத்​தில்​ 1 முதல்​ 5-வது நடைமேடை வரை 18 மீட்​டர்​ அகலம்​, 120 மீட்​டர்​ நீளத்​துக்​கு புதி​ய இரும்​பு நடை மேம்​பாலம்​ அமைக்​கப்​படு​கிறது.

அதி​லும்​, 4-வது நடைமேடை​யில்​ பெரிய பள்​ளம்​ தோண்​டப்​பட்​டு, தூண்​கள்​ அமைக்​கும்​ பணி நடை​பெறுகிறது. இதன்​காரண​மாக, 1 முதல்​ 5 வரை உள்​ள நடைமேடைகளின்​ ரயில்​ தண்​ட​வாளங்​கள்​ முழு​மை​யாக மூடப்​பட்​டுள்​ளன.

எனவே, விரைவு ரயில்​கள், 6 முதல்​ 9-வது வரை உள்​ள நடைமேடைகளில்​ இருந்​து இயக்​கப்​படு​கின்​றன. மின்​சா​ர ரயில்​கள்​ வழக்​கம்​போல நடைமேடை 10, 11-வது நடைமேடைகளில்​ இருந்​து இயக்​கப்​படும்​.

இப்​பணி​கள்​ முடிந்​த​பிறகு அடுத்​தகட்​டப்​பணி, 6-வது முதல்​ 8-வது நடைமேடை வரை நடை மேம்​பாலத்​தின் தூண்​கள்​ மற்​றும்​ தாங்​கும் சட்​டங்​களை அமைப்​ப​தற்கான பணி​கள்​ நடை​பெற உள்​ளன.

அப்​போது, அதற்​கேற்​ப ரயில்​ சேவை​யில்​ மாற்​றம்​ செய்​யப்​பட உள்​ளன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​. மின்​சா​ர ரயில்​ சேவை​யில்​ மாற்​றம்​: கடற்​கரை – தாம்​பரம்​ – செங்​கல்​பட்​டு வழித்​தடங்​களில்​ இயக்​கப்​படும்​ சில மின்​​சார ரயில்​ சேவை​கள்​ ஆக.22 முதல்​ ஆக.30-ம்​ தேதிவரை முழு​மை​யாக​வும்​, பகு​தி​யாக​வும்​ ரத்​து செய்​யப்​பட உள்​ளன.

Spread the love