August 14, 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்: ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தல்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை.

தேசியப் பாடலான “வந்தே மாதரம்” உருவானதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘ஹர் கர் திரங்கா’ (Har Ghar Tiranga) பிரச்சாரத்தின் கீழ் இந்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற வளாகங்கள், சென்னை மற்றும் மதுரையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அதன் மண்டல மையங்கள், மாவட்ட நீதித்துறை அலகுகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தேசியப் பாடலான “வந்தே மாதரம்” இசைக்கப்படும் அல்லது பாடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சிகளின் வரிசைமுறை பின்வருமாறு அமையும்: முதலில் தேசியப் பாடலான “வந்தே மாதரம்” இசைக்கப்படும், அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்படும், இறுதியாகத் தேசிய கீதம் இசைக்கப்படும்.

Spread the love