சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஓபி – இந்திய உணவுக்கழகம் அணிகள் மோதின.
இந்த ஆட்டம் 1-1 என என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஐஓபி அணி தரப்பில் 33-வது நிமிடத்தில் தில்ராஜ் சிங்கும், இந்திய உணவுக்கழகம் தரப்பில் 32-வது நிமிடத்தில் ஆனந்தும் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎஃப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஏஜிஓ அணியை வீழ்த்தியது. ஐசிஎஃப் அணி தரப்பில் அலோக் பர்லா, ராகுல் யாதவ், ராகேஷ், ஷியாம் குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

More Stories
வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்தியாவின் குங்கும் மொஹோத்: ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தல்
குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் @ ஆசிய விளையாட்டு போட்டி
ஆசிய விளையாட்டு : வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது