August 18, 2026

சுதந்​திர தின விழா​வின்போது நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி​: 200+ தீவிரவாதிகள் கைது

புதுடெல்லி: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட தீவிரவாதிகள் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். பாகிஸ்​தானை பூர்வீக​மாகக் கொண்​ட​வர் ஷெசாத்பட்டி. இவர் தற்​போது பிரேசில், பெல்​ஜி​யம் உள்​ளிட்ட நாடு​களில் வசிப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்த இவர், தன்னை சமூக வலைதள பிரபலமாக முன்​னிறுத்தி வரு​கிறார்.

பல்​வேறு சமூக வலை​தளங்​கள் வாயி​லாக இந்​திய இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்​களை தனது குழுவில் ஷெசாத் பட்டி இணைத்து வரு​கிறார். கடந்த சுதந்​திர தின விழா​வின்​போது இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​களில் தீவிரவாத தாக்​குதல்​களை நடத்த ஷெசாத் பட்டி சதித் திட்​டம் தீட்டி​யிருந்​தார்.

இதுகுறித்து இந்​திய உளவுத் துறை, மத்​திய உள்​துறை அமைச்சகத்​திடம் ரகசிய அறிக்​கையை சமர்ப்​பித்​தது. இதைத் தொடர்ந்து ஷெசாத் பட்டி குழுவை சேர்ந்த அனை​வரை​யும் வேட்டை​யாட மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ரகசிய உத்தர​வினை பிறப்​பித்​தார்.

இதன்​பேரில் மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் அனைத்து மாநிலங்​களின் காவல் துறை​கள் ஒன்​றிணைந்து ஷெசாத் பட்டி குழுவை சேர்ந்​தவர்​களை ரகசி​ய​மாக கண்​காணித்​தன. சுதந்​திர தின விழாவுக்கு முன்​பாக கடந்த 12-ம் தேதி நாடு முழு​வதும் ஒரே நேரத்​தில் சோதனை​கள் நடத்​தப்​பட்​டன. அப்​போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்கும் மேற்​பட்ட தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​கள் மீது 80-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன.

உத்தர பிரதேசத்​தில் 62 பேர், ஹரி​யா​னா​வில் 52 பேர், டெல்​லி​யில் 51 பேர், பஞ்​சாபில் 44 பேர், ராஜஸ்​தானில் 15 பேர், மகாராஷ்டிராவில் 8 பேர், உத்​த​ராகண்​டில் 5 பேர், கர்​நாட​கா, குஜராத், பிஹாரில் தலா 3 பேர், தெலங்​கா​னா, இமாச்சல பிரதேசம், காஷ்மீர், கேரளா​வில் தலா 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்​களிடம் இருந்து வெடி பொருட்​கள், கையெறி குண்​டு​கள், துப்​பாக்​கி​கள் உள்​ளிட்​டவை பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதில் பெரும்​பாலான ஆயுதங்​கள் பாகிஸ்தானில் தயாரிக்​கப்​பட்​டவை என்​பது உறுதி செய்​யப்​பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆதர​வுடன் செயல்​பட்ட ஷெசாத் பட்டி குழுவை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அரசு முழு​மை​யாக அழித்​திருக்​கிறது. சுமார் 200-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். இதன்​மூலம் அவர்​களது தீவிர​வாத சதித் திட்டங்கள் முறியடிக்​கப்​பட்டு உள்​ளன.

இந்​திய பாது​காப்பு படைகள் ஒன்​றிணைந்து செயல்​பட்டு 14 மாநிலங்​களை சேர்ந்த பல்​வேறு நகரங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தின. இதன்​காரண​மாக சுதந்​திர தினத்​துக்கு முன்பாக ஷெசாத் குழு கூண்​டோடு பிடிபட்​டிருக்​கிறது. தீவிர​வாதத்தை ஒரு​போதும் சகித்​துக் கொள்ள மாட்​டோம் என்​பதை பிரதமர் நரேந்​திர மோடி அரசு மீண்​டும் ஒரு​முறை உறுதி செய்திருக்​கிறது.

ஷெசாத் பட்டி குழு​வினரி டம் இருந்து ஏராள​மான வெடிபொருட்கள், கையெறி குண்​டு​கள், துப்​பாக்​கி​கள், சிசிடிவி கேம​ராக்​கள் உள்​ளிட்​டவை பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. இந்த குழு​வின் அனைத்து நடவடிக்​கைகளுக்​கும் ஐஎஸ்ஐ அமைப்பு நிதி​யுதவி அளித்​திருக்​கிறது. பல்​வேறு தீவிர​வாத நடவடிக்​கை​களில் ஷெசாத் பட்டி குழு​வுக்கு தொடர்​பிருக்​கிறது. இதுகுறித்து தொடர்ந்து வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்வாறு மத்​தி​ய அமைச்​சர்​ அமித்​ ஷா தெரி​வித்​துள்​ளார்​.

Spread the love