செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் சின்க்ஃபீல்டு கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 28-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதம் உள்ள நிலையில் பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் முதலிடத்தை அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போதைய வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள கிராண்ட் செஸ் டூரின் இறுதி போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் பிரக்ஞானந்தா.

More Stories
வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்தியாவின் குங்கும் மொஹோத்: ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தல்
குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் @ ஆசிய விளையாட்டு போட்டி
ஆசிய விளையாட்டு : வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது