August 20, 2026

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு பிரக்​ஞானந்​தா தகுதி

செயின்ட் லூயிஸ்: அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் கிளப்​பில் சின்க்ஃபீல்டு கோப்​பைக்​கான செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 8-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்​தா, பிரான்​ஸின் மேக்​சிம் வாச்​சி​யர் லாக்​ரேவுடன் மோதி​னார். இதில் பிரக்​ஞானந்தா 28-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.

இன்​னும் ஒரு சுற்று மட்​டுமே மீதம் உள்ள நிலை​யில் பிரக்​ஞானந்தா 5 புள்​ளி​களு​டன் முதலிடத்தை அமெரிக்​கா​வின் வெஸ்லி சோவுடன் பகிர்ந்து கொண்​டுள்​ளார்.

தற்​போதைய வெற்​றி​யின் மூலம் இந்த ஆண்​டின் பிற்​பகு​தி​யில் நடை​பெற உள்ள கிராண்ட் செஸ் டூரின் இறுதி போட்​டி​யில் தனது இடத்தை உறுதி செய்​துள்​ளார் பிரக்​ஞானந்​தா.

Spread the love