August 24, 2026

புற்றுநோயாளிகளுக்கு இயற்கையான ‘விக்’குகளை இலவசமாக வழங்க திட்டம்

சென்னை: டாடா மெமோரியல் – செரியன் ஃபவுண்​டேஷன் ஆகியவை இணைந்து புற்​று​நோ​யாளி​களுக்கு இயற்​கை​யான ‘விக்’கு​களை இலவச​மாக வழங்க முடிவு செய்​துள்​ளன.

நாடு முமுழு​வதும் பொருளா​தார ரீதி​யாக பின்​தங்​கிய புற்​று​நோ​யாளி​களுக்கு இயற்​கை​யான மனித முடி​யால் ஆன உயர்தர விக்​குளை வழங்​கு​வதன் மூலம் புற்​று​நோய் ஆதரவு சிகிச்​சையை வலுப்​படுத்த டாடா மெமோரியல் சென்ட்​டர் (டிஎம்​சி) மற்​றும் செரியன் ஃபவுண்​டேஷன் ஆகியவை ஒரு வரலாற்று சிறப்​புமிக்க கூட்​டாண்மை நடவடிக்​கையை மேற்​கொள்​கின்​றன.

இதற்​கான புரிந்​துந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் கீழ், டாடா மெமோரியல் சென்ட்​டர் குழு​மம் முழு​வதற்​கும் விக்​கு​களைப் பெறு​தல், ஒருங்​கிணைத்​தல் மற்​றும் விநி​யோகிப்​ப​தற்​கான ஒருங்​கிணைப்பு முகமை​யாக மும்​பை​யில் உள்ள டாடா மெமோரியல் மருத்​து​வ​மனை செயல்​படும்.

இந்​தக் கூட்​டாண்​மை​யின் ஒரு பகு​தி​யாக, செரியன் ஃபவுண்​டேஷன் அதன் முதன்மை திட்​ட​மான ‘கிஃப்ட் ஹேர்- கிஃப்ட் கான்ஃபிடன்​ஸ்’ (GHGC) என்ற முன் ​முயற்​சி​யின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்​பிலான இயற்​கை​யான மனித முடி​யாலான 500 உயர்தர விக்​கு​களை (செயற்கை முடி) டாடா மெமோரியல் சென்ட்​டருக்கு நன்​கொடை​யாக வழங்​கு​கிறது.

புற்​று​நோய் சிகிச்​சை​யின்​போது, பக்​க​விளை​வாக நோயாளி​கள், தலை முடி உதிர்​தல்​, ​முடி இழப்பு போன்ற பிரச்​சினை​களை எதிர்​கொள்​கின்​றனர். இயற்​கை​யான மனித முடி​யால் ஆன உயர்தர விக்​கு​கள் நம்​பிக்​கை​யை​யும் உணர்​வுபூர்​வ​மான நல்​லுணர்​வை​யும் மீட்​டெடுப்​ப​தில் பெரிதும் உதவு​கின்​றன.

எனினும் அவை பொது​வாக மருத்​து​வக் காப்​பீட்​டின் கீழ் வராத​தால், வசதி​யற்ற குடும்​பங்​களால் அவற்றை வாங்க முடிவ​தில்​லை. இந்​தக் கூட்டாண்​மை​யின் மூலம், வசதி​யற்ற நோயாளி​களுக்கு இலவச​மாக விக்​கு​கள் கிடைப்​பது உறு​தி செய்​யப்​படு​கிறது.

Spread the love