சென்னை: டாடா மெமோரியல் – செரியன் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து புற்றுநோயாளிகளுக்கு இயற்கையான ‘விக்’குகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளன.
நாடு முமுழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய புற்றுநோயாளிகளுக்கு இயற்கையான மனித முடியால் ஆன உயர்தர விக்குளை வழங்குவதன் மூலம் புற்றுநோய் ஆதரவு சிகிச்சையை வலுப்படுத்த டாடா மெமோரியல் சென்ட்டர் (டிஎம்சி) மற்றும் செரியன் ஃபவுண்டேஷன் ஆகியவை ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டாண்மை நடவடிக்கையை மேற்கொள்கின்றன.
இதற்கான புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், டாடா மெமோரியல் சென்ட்டர் குழுமம் முழுவதற்கும் விக்குகளைப் பெறுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் விநியோகிப்பதற்கான ஒருங்கிணைப்பு முகமையாக மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை செயல்படும்.
இந்தக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, செரியன் ஃபவுண்டேஷன் அதன் முதன்மை திட்டமான ‘கிஃப்ட் ஹேர்- கிஃப்ட் கான்ஃபிடன்ஸ்’ (GHGC) என்ற முன் முயற்சியின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்பிலான இயற்கையான மனித முடியாலான 500 உயர்தர விக்குகளை (செயற்கை முடி) டாடா மெமோரியல் சென்ட்டருக்கு நன்கொடையாக வழங்குகிறது.
புற்றுநோய் சிகிச்சையின்போது, பக்கவிளைவாக நோயாளிகள், தலை முடி உதிர்தல், முடி இழப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இயற்கையான மனித முடியால் ஆன உயர்தர விக்குகள் நம்பிக்கையையும் உணர்வுபூர்வமான நல்லுணர்வையும் மீட்டெடுப்பதில் பெரிதும் உதவுகின்றன.
எனினும் அவை பொதுவாக மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராததால், வசதியற்ற குடும்பங்களால் அவற்றை வாங்க முடிவதில்லை. இந்தக் கூட்டாண்மையின் மூலம், வசதியற்ற நோயாளிகளுக்கு இலவசமாக விக்குகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

More Stories