August 29, 2026

அமெரிக்காவிடம் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வாங்கும் இந்தியா

புதுடெல்லி: அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்​தியா வாங்க உள்​ளது. இந்தியா-அமெரிக்கா இடையி​லான பாது​காப்பு உறவு​களை வலுப்​படுத்​தும் வித​மாக அமெரிக்​கா​விடம் இருந்து ஏவுகணைகள், துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை​யும், ராணுவ தளவாடங்​களை​யும் இந்தியா கொள்​முதல் செய்து வரு​கிறது.

அந்த வகை​யில் அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை அமைப்பை இந்​தியா வாங்க திட்டமிட்டுள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​துள்​ளார். அவர் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில்​,”​போர்க்​களத்​தில் சோதிக்​கப்​பட்ட ‘எப்​ஜிஎம்​-148 ஜாவலின்’ என்று அழைக்​கப்​படும் பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்​தியா வாங்க திட்​ட​மிட்​டுள்​ளது.

கடந்த மே மாதம் சிங்​கப்​பூரில் நடை​பெற்ற ஐஐஎஸ்​எஸ் ஷங்​ரி-லா உரை​யாடலில் அமெரிக்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​செத் குறிப்​பிட்​டதை போல, இது அமெரிக்​கா-இந்​தியா பாதுகாப்பு உறவில் மிக முக்​கிய​மான முன்​னேற்​ற​மாகும். மேலும், இது இரு நாடு​களுக்​கும் இடையி​லான கூட்டு உற்​பத்தி வாய்ப்புகளுக்​கான கதவைத் திறக்​கிறது.

இரு நாடு​களுக்​கும் இடையி​லான பாது​காப்பு ஒத்​துழைப்பு இதுவரை இல்​லாத அளவுக்கு உச்ச நிலை​யைக் எட்​டி​யுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், எத்​தனை ஏவு​கணை அமைப்புகளை வாங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என்​பதை செர்ஜியோ கோர் தெரிவிக்​க​வில்​லை. ‘எப்​ஜிஎம்​-148 ஜாவலின்’ என்​பது ஒரு கையடக்க பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை அமைப்​பாகும். இது கவச இலக்​கு​களைத் தாக்கி அழிக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளதுடன், அமெரிக்கா மற்​றும் அதன் நட்பு நாடு​களின் படைகளால் பரவலாகப் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.PauseMute

எப்​படி இயங்​கும்?

தோளில் சுமந்து ஏவக்​கூடிய இந்த ஏவு​கணை அமைப்​பில் தானியங்கி வழி​காட்​டும் முறை உள்​ளது. இதன் மூலம் ஏவு​கணை ஏவப்​பட்ட பிறகும் தன் இலக்​கைத் தானாகவே பின்​தொடர்ந்து தாக்​கும்.

இதனால் அதை ஏவிய வீரர் உடனடி​யாக மறை​விடத்​துக்​குச் சென்று, எதிரி​யின் பதில்​தாக்​குதலில் இருந்து தப்​பிக்க முடி​யும். இந்த ஏவு​கணை, பீரங்​கி​யின் மேற்​பகு​தி​யில் உள்ள, வீரர்​கள் உள்ளே நுழை​யும் ஹாட்ச் பகு​தியை தாக்​கு​கிறது. இது ஏவப்பட்டதிலிருந்து இலக்​கைத் தாக்​கும் வரை, ‘U’ வடிவப் பாதையில் பறந்​து சென்​று, துல்​லிய​மாக இலக்​கை ​தாக்​கும்.

Spread the love