புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. ரஷ்யாவின் எஸ் – 400 ஏவுகணைகள் உலகின் வலிமையான, அதிநவீன ஏவுகணையாக கருதப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.51,838 கோடியில் ஐந்து எஸ் – 400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.
இதன்படி மூன்று ஏவுகணைகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது. மீதமுள்ள இரு ஏவுகணை வரும் நவம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவின் எஸ் – 400 ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன.
இதைத் தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் ரஷ்யாவிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் விருப்பத்தை தீவிரமாக பரிசீலித்து வருவதாக ரஷ்ய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

More Stories
மும்பை, டெல்லியை முந்திய பெங்களூரு – உலகின் சிறந்த இரவுப் பொழுது நகரங்கள்
“இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாகவே காங். பயன்படுத்துகிறது” – மோகன் யாதவ் விமர்சனம்
“விதைகளால் ஆன விநாயகரை வழிபடுங்கள்” – பொதுமக்களுக்கு நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்