September 1, 2026

ஒரே மேடையில் 4 தென்னிந்திய ஹீரோக்கள்: பிக் பாஸ் புரமோ வீடியோ வைரல்

தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம் என 4 பிக்​பாஸ் நிகழ்ச்​சிகளின் தொகுப்​பாளர்​களான விஜய் சேதுப​தி, நாகார்​ஜு​னா, கிச்சா சுதீப், மோகன் லால் ஆகிய 4 முன்​னணி நடிகர்​களை​யும் ஒரே திரை​யில் கொண்​டு​வந்து ஜியோ ஹாட்​ஸ்​டார் நிறு​வனம் வெளி​யிட்டுள்ள புதிய புரமோ வீடியோ வைரலாகி வரு​கிறது.

தென்​னிந்​தி​யா​வின் 4 மொழிகளுக்​கான பிக் பாஸ் நிகழ்ச்சி களும் செப். 6 அன்று ஒரே நாளில் தொடங்க உள்​ளதை முன்​னிட்டு இந்த புரமோ வீடியோ வெளியிடப்​பட்​டுள்​ளது.

தென்​னிந்​தி​யா​வின் கலாச்​சா​ரம் மற்​றும் உணவு​களைக் கொண்​டாடும் வகை​யில் நகைச்​சுவை​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த விளம்​பரம், பிக் பாஸ் தொடக்க விழாவுக்​கான தளத்தை அமைத்​துள்​ளது.

இதுபற்றி ஜியோஸ்​டார் (தெற்​கு) பொழுது​போக்கு பிரி​வின் தலை​வர், கிருஷ்ணன் குட்டி கூறும்போது, “எங்​களது 4 தொகுப்​பாளர்​களும் தங்​களது ரசிகர்​களு​டன் தனித்​து​வ​மான பிணைப்​பைக் கொண்​டுள்​ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மாநிலங்​களி​லும் வெற்​றி​பெற இந்த பிணைப்பே முக்​கிய காரணம்.

விஜய் சேதுப​தி, நாகார்​ஜு​னா, கிச்சா சுதீப் மற்​றும் மோகன்​லால் ஆகியோரை தென்​னிந்​திய கலாச்​சா​ரத்​துக்கு ஏற்ப, அவர்​களின் இயல்பு மாறாமல் ஒன்​றாகக் கொண்​டுவர இந்த விளம்​பரம் எங்​களுக்கு ஒரு வாய்ப்​பாக அமைந்​தது. இவர்​கள் நால்​வரை​யும் ஒரே திரை​யில் காண்​பது ரசிகர்​களுக்கு மறக்க முடி​யாத தருணம். 4 மொழிகளி​லும் ஒரே நேரத்​தில் தொடங்​க​வுள்ள இந்த பிரம்​மாண்​ட​மான நிகழ்வை இந்த விளம்​பரம் மிகச் சரி​யாகப் பிர​திபலிக்​கிறது” என்​றார்​.

Spread the love