September 7, 2026

பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த ரூ1 கோடியே 75 லட்சத்தில் திட்டம் பழனியில் அமைச்சர் விக்னேஷ் கூறினார்…

 பழனி செப்டம்பர் 7 

பழனிக்கு நேற்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை  அமைச்சர் விக்னேஷ் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது 

பழனியில் பள்ளி அரசு அலுவலகங்கள் அருகில் உள்ள டாஸ்மார்க் மதுக்கடைகளை மாற்றுவது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். பொது மக்களுக்கு இடையூறாக உள்ள   டாஸ்மாக் மதுக்கடைகள் இடம் மாற்றம் செய்யப்படும். பழனியில் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை இடம் மாற்றம் செய்யப்படும். பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த ஒரு கோடி 75 லட்சத்தில் திட்டம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் விபத்தில் இறந்தது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. இது பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள் திறப்பதில் உள்ள சாதகங்கள் பாதங்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கள்ளுக்கடைகள் பற்றி முழு ஆய்வுகள் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி பாலன், நகர செயலாளர் மிதுன் மனோகரன், ஜே பி எஸ் சஞ்சய் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Spread the love