சென்னை: பிளாஸ்டிக் டெக்னாலஜி தொடர்பாக டிப்ளமா படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக மத்திய அரசின் சிப்பெட் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (சிப்பெட்) கல்வி நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் திரு.வி.க. தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது..
இந்த நிறுவனம், பிளாஸ்டிக் மோல்ட் இன்ஜினியரிங் டிப்ளமா, பிளாஸ்டிக் டெக்னாலஜி டிப்ளமா, பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் முதுகலை டிப்ளமா படிப்புகளை வழங்கி வருகிறது.
3 ஆண்டு கால டிப்ளமா படிப்பில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களும் ஒன்றரை ஆண்டு கால முதுகலை டிப்ளமா படிப்பில் பொறியியலில் டிப்ளமோ (மெக்கானிக்கல், பிளாஸ்டிக் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்) முடித்தவர்களும் சேரலாம்.
மேற்கண்ட டிப்ளமா படிப்புகளுடன் லேட்ரல் என்ட்ரி முறையில் பிளாஸ்டிக்ஸ் மோல்டு டெக்னாலஜி டிப்ளமா, பிளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி டிப்ளமா படிப்புகளையும் வழங்கி வருகிறது.
இரண்டு ஆண்டு கால இந்த படிப்புகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் (இயற்பியல் வேதியியல், கணிதம் பாடங்கள் படித்தவர்கள்) எஸ்எஸ்எல்சி-யைத் தொடர்ந்து 2 ஆண்டு கால ஐடிஐ படிப்பில் டூல் அண்ட் டை, ஜெனரல் மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், மெக்கானிக்கல், ஃபிட்டிங், பிளாஸ்டிக், பாலிமர், கெமிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் படித்தவர்களும் சேர தகுதியுடையவர் ஆவர்.
தற்போது மேலே குறிப்பிடப்பட்ட டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது.
இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தேவையான கல்விச்சான்றிதழ்களுடன் சிப்பெட் நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று உடனடியாக சேர்க்கை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94449-19183, 9363866518 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சிப்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

More Stories
மாணவர்களின் கனவுகளுக்கு சிறகளிப்பவர்கள் ஆசிரியர்கள்” – முதல்வர் விஜய் புகழாரம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது