September 11, 2026

பழனி அரசு மருத்துவமனையில் கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு

 பழனி செப்டம்பர் 11

 பழனி அரசு மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். பின்பு தாய் மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்கான மோதிரங்கள் பாதுகாப்பு அறையை பார்வையிட்டார். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் முறையிட்டனர்.  அதைக் கேட்ட அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  இதில் அருகில் டாக்டர் உதயகுமார். தாசில்தார் மங்களபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபுபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love