September 13, 2026

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில், மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 8 பள்ளி ஆசிரியர்கள், 3 அரசு கல்லூரி முதல்வர்கள், 8 தனியார் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 38 பேருக்கு, “தேசிய கட்டமைப்பாளர்கள்” விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

ஆளுநர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னாள் உதவி ஆளுநர்கள் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், எஸ்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம், ரோட்டரி மாவட்ட கல்விக் குழு தலைவர் எம்.அய்யப்பராஜ், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் எம்.ஏ.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

செந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஆர்.சிவக்குமார், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி முதல்வர் பி.மைதிலி ஆகியோர் உரையாற்றினர். ரோட்டரி சங்க செயலாளர் நமசிவாயம், முன்னாள் தலைவர் இ.ஆர்.சுரேந்திரன், டி.பி.வெங்கடாசலபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Spread the love