நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 40ம் ஆண்டு அமைப்பு தினவிழா நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, ரத்த தான முகாமை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது, பொதுமக்களின் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தங்களது 40-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, ரத்ததானம் செய்வோம், பிற உயிர் காப்போம், என்ற நோக்கத்தோடு, ரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.
சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்கள். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகலட்சுமி, சங்க மாவட்ட தலைவர் பாலவிநாயகம், செயலாளர் பிரபுசங்கர், பொருளாளர் லோகமணிகண்டன், ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

More Stories
கரூர் மாவட்டம்
பழனி
வ.உ. சிதம்பரம் பிள்ளை 155 வது பிறந்தநாள் விழா