September 16, 2026

கரூர்

செப் 16

கரூர் மாவட்ட அதிமுக சார்பில்பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 பிறந்த நாளை முன்னிட்டு,  முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் .ம.சின்னசாமி  முன்னிலையில் , கரூர் மாவட்ட கழக செயலாளர் .கமலக்கண்ணன்  வெங்கமேடு பேரறிஞர் அண்ணா,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கழக கொடியை ஏற்றிவைத்து கழக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், கருர் மாவட்ட 4 தொகுதிகளுக்கும் உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக ஊராட்சி கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Spread the love