September 23, 2026

ராசிபுரம் அருகே நச்சு ரசாயண நுரைகளுடன் ஓடும் திருமணிமுத்தாறு: அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரைகளை ஆபத்தான வெள்ள நீரிலிருந்து இறங்கி அகற்றும் கிராம மக்கள்.

ஆகாயதாமரை செடிகளை அகற்றி திருமணிமுத்தாற்றை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

வெள்ள நீரில்  ஆகாயத்தாமரை செடிகள் அடித்துவரப்பட்டு நீர் வழிப்பாதையில் தடை ஏற்படுத்துவதால் விவசாய நிலங்களுக்குள் நச்சு ரசாயன நுரைகளுடன் வெள்ள நீர் பாய்ந்து கடுமையான விவசாயம் பாதிக்கப்படுவதாக வேதனை .

 சேலம், ஏற்காடு பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்  நிலையில் ,இதில் கொத்து கொத்தாக  ஆகாயத்தாமரைச் செடிகள் அடித்து வரப்பட்டு, மதியம்பட்டி,மணல்காடு, செளரிபாளையம் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்தில் தேங்கியதால் தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதாகவும்,சுற்றி உள்ள கிராமங்களில்  கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதியம்பட்டி பகுதி வழியாக பாய் தோடும் திருமணிமுத்தாற்றில் நச்சு ரசாயன நுரைகள் பொங்கி துர்நாற்றத்துடன்  வெள்ள நீர் பாய்ந்து ஓடுகிறது.

இதனால் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் மாசுபட்டு கால்நடைகள் நோய்வாய்ப்படுவதாக குற்றசாட்டு வைப்பதுடன், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத இந்த திருமணிமுத்தாற்றை தூர்வாரி, ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் .

சேலம் மாவட்டம்  சேர்வராயன் மலைப்பகுதியில் உருவாகி நாமக்கல் மாவட்டம் வழியாக பயணித்து  காவேரி ஆற்றில் கலக்கிறது திருமணிமுத்தாறு…

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் திறந்துவிடப்படுவதால் திருமணிமுத்தாறு மாசு அடைந்து வருவதாக  விவசாயிகள் பல ஆண்டுகளாக புகார் கூறி வருகின்றனர்.

 ஆனால் இதுவரை எந்த ஒரு அரசும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பாக ,சேலம் மாவட்டத்தில் குகை, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, வீரபாண்டி ஆகிய இடங்களில் அதிக அளவில் சாயப்பட்டறை ஆலைகள் இயங்கி வரும் நிலையில் இங்கு இருந்து வரும் கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் வாய்க்கால் வழியாக திருப்பி விடப்படுவதால் திருமணிமுத்தாற்றில் கலந்து , கருப்பு நிறத்துடன் துர்நாற்றம் வீசி , நச்சு ரசாயான நுரையுடன் விவசாய நிலங்கள் வழியாக பயணிக்கிறது. இதனால் நிலத்தடி நீரும் பெரிதும் மாசு அடைந்து விட்டதால் ஆற்று நீரை  நம்பி  கடந்த 30 ஆண்டுகளாக சாகுபடி செய்து வந்த இப்பகுதி விவசாயிகள் தற்போது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் இதனை குடிக்கும் கால்நடைகளுக்கும் நோய்வாய் படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே திருமணிமுத்தாறு மாசு அடைவதாகவும், சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் , பல ஆண்டுகளாக தூர்வாரப் படாத திருமணிமுத்தாற்றை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

Spread the love