September 24, 2026

முகேஷ் அம்பானியை பின்னுக்​குத் தள்ளி இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆனார் கவுதம் அதானி

புதுடெல்லி: லண்​டனைச் சேர்ந்த ஹுருன் நிறு​வனத்​தின் இந்தியா கிளை சார்​பில், 2026-ம் ஆண்​டுக்​கான இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில், அதானி குழும தலை​வர் கவுதம் அதானி​யும் அவரது குடும்​பத்​தினரும் ரூ.9.22 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான சொத்து மதிப்​புடன் முதலிடத்​தைப் பிடித்​துள்​ளனர்.

ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் தலை​வர் முகேஷ் அம்பானி​யும் அவரது குடும்​பத்​தினரும் ரூ.8.63 லட்​சம் கோடி சொத்து மதிப்​புடன் 2-வது இடத்​தில் உள்​ளனர். இவர்​களுக்கு அடுத்​த​படி​யாக லண்டனை தலை​மை​யிட​மாகக் கொண்ட ஆர்​சிலர் மிட்​டல் நிறுவனத்தின் தலை​வர் லட்​சுமி நிவாஸ் மிட்​டல் மற்​றும் குடும்பத்தினர் ரூ.3.39 லட்​சம் கோடி சொத்து மதிப்​புடன் 3-வது இடத்​தில் உள்ளனர்.

சீரம் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் இந்​தி​யா​வின் சைரஸ் எஸ். பூனா​வாலா 4, ஹெச்​சிஎல் நிறு​வனத்​தின் ரோஷினி நாடார் மல்​ஹோத்ரா 5, ஆதித்யா பிர்லா குழு​மத்​தைச் சேர்ந்த குமார் மங்​கலம் பிர்லா 6, சன் பார்​மாசூட்​டிகல்ஸ் நிறு​வனத்​தின் திலீப் ஷாங்வி 7, விப்ரோ நிறு​வனத்தின் அசிம் பிரேம்ஜி 8, வேதாந்தா ரிசோர்​சஸ் நிறுவனத்தின் அனில் அகர்​வால் 9, டோரன்ட் பார்​மாசூடிகல்ஸ் நிறு​வனத்​தைச் சேர்ந்த சமீர் மேத்தா 10-வது இடத்​தி​லும் உள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு ஹுருன் இந்​தியா வெளி​யிட்ட பணக்காரர்கள் பட்​டியலில் முகேஷ் அம்​பானி​ முதலிடத்​திலும், கவுதம் அதானி​ 2-வது இடத்​திலும் இருந்​தனர்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

Spread the love