புதுடெல்லி: வரும் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள 3 நாள் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்தையொட்டி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வரும் 26, 27 ஆகிய தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்களாக இருப்பதால், அதைத் தொடர்ந்து 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதனால் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிக் கிளை சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்கும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (27-ம் தேதி) வங்கிகள் செயல்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் செயல்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் மற்றும் பணக் காப்பகங்களும் (Currency Chests) அன்று செயல்படும்.

More Stories
முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆனார் கவுதம் அதானி
தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிவு: இன்று பவுனுக்கு ரூ.1,080 குறைவு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு: இன்றைய விலை நிலவரம்