சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1ஆம் தேதியை முன்னிட்டு முதியோர்களைப் பாதுகாத்து உடல்நலனை உறுதி செய்வது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பாகும். முதியோர்களின் அனுபவம் அறிவுரை மதித்து, அவர்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்க வேண்டும்.இதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் முதியோர்களின் நலனைப் பேணும் வகையில், மருத்துவர்கள் மூலம் உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.கரூர் அன்புக் கரங்கள் முதியோர் இல்லத்தில் 30 முதியோர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் உடல் மற்றும் மனநலனைப் பேணுவதன் அவசியம் குறித்து மருத்துவக் குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், முதியோர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் கேட்டறிந்தார். தேவையான உதவிகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
முதியோர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

More Stories
தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கரூரில் அக்.1 ம் தேதி நடைபெற்றது.
15 சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா
கருர் செப்30