டெல்லி: ஜப்பானில் நேற்று நிறைவடைந்த 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 85 பதக்கங்களை (21 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள், 37 வெண்கலப் பதக்கங்கள்) வென்று பதக்க பட்டியலில் 4-ஆம் இடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது. இந்த சூழலில் இந்த போட்டியில் பங்கேற்று பதங்கங்களை வென்றுள்ள இந்திய வீரர்களுக்கு பாத்தாரு தெரிவித்து தண்டு அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார். பிரதமர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து பதிவில் ” 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் உறுதியுடனும், ஆர்வத்துடனும், சிறப்பான விளையாட்டு மனப்பான்மையுடனும் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டிற்குப் பெருமகிழ்ச்சியைத் தேடித்தந்த பதக்கம் வென்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த போட்டிகளில் கிடைத்த வெற்றிகள் வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கட்டும்; அத்துடன், அடித்தள நிலையிலும் விளையாட்டை வலுப்படுத்த இவை பங்களிக்கட்டும்” என பாராட்டு தெரிவித்துள்ளார்.

More Stories
ஆந்திராவில் கர்ப்பிணியை தூளியில் வைத்து 8 கி.மீ. சுமந்து சென்ற உறவினர்கள்
விவசாயிகள் தேசிய தென்னை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு!
இந்தியாவிடம் 190 அணுகுண்டு: ஆய்வறிக்கையில் தகவல்