விருதுநகர்: புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்கதர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் மிகவும் புகழ் வாய்ந்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழிபட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். சதுரகிரி மலை சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப் படுகிறது. இந்த மலைக்கு செல்ல அனைத்து நாட்களிலும் அனுமதி வழங்கப் படாது.
அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப் படும். அதிலும் குறிப்பாக ஆடி, தை, புரட்டாசி மகாளய அமாவாசை அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருவார்கள்.
இந்த ஆண்டு புரட்டாசி மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 10ம் தேதி வருகிறது. எனவே இதனை முன்னிட்டு, பக்தர்கள் நாளை(அக்.8) முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி மலையேறி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.மகாளய அமாவாசை என்பதால் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

More Stories
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: நவம்பர் 15-ல் கொடியேற்றம்!
புரட்டாசி 3-வது சனிக்கிழமை: தென்திருப்பதி பெருமாள் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு சிறப்பு வழிபாடு
64 நாட்களுக்கு பிறகு பழநியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்