புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, கர்நாடக முதல்வர் சிவகுமார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்பி. சுப்ரியா சுலே, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கோரிக்கை மனு அளிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி இண்டியா கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்றனர். நுழைவு வாயிலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உட்பட 10 எம்பிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இதன்பிறகு ராகுல் காந்தி கூறும்போது, “இந்திய ஜனநாயகத்தை ஞானேஷ்குமார் அழித்து வருகிறார். வாக்கு திருட்டுக்கு அவர் உடந்தையாக இருக்கிறார் என்று குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம். இதுதொடர்பான ஆதாரங்களை அவர் கோரினார். எங்களது மனு குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்” என்று தெரிவித்தார்.

More Stories
“வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படுவீர்கள்!” – ஒன்றிய அரசுக்கு CPI(M) எம்பி கடும் எச்சரிக்கை
சிஜேபி ஜந்தர் மாந்தர் போராட்டம் 2.0: போலீஸ் கைது நடவடிக்கை – டெல்லி ஸ்தம்பிப்பு
இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: எலான் மஸ்க் புகாருக்கு மத்திய அமைச்சர் பதில்