புதுடெல்லி: டெல்லி காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், மூத்த வழக்கறிஞர் சாய் தீபக் ஆஜராகி, டெல்லியில் பட்டாசுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து எடுத்துரைத்தார். நாடு முழுவதும் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இருக்கும் நிலையில் டெல்லியில் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் இதை நீக்கி கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பாதிக்காத வகையில் மாசு குறைந்த பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, வழக்கை விரிவான விசாரணைக்காக வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More Stories
பஞ்சாப்பில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: எஸ்ஐஆருக்கு பிந்தைய இறுதிப் பட்டியல் வெளியீடு
நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் ‘ஐஎன்எஸ் மாங்ரோல்’ கடற்படையில் இணைப்பு
கரப்பான் பூச்சிக்குப் பின் இப்போது ஈக்கள்: டெல்லி போராட்டங்களுக்கு நடுவே ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்