அமெரிக்க கிரிக்கெட் அணியை டிரம்ப் பாராட்டியது பற்றி…

டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் அமெரிக்க அணி பங்கேற்று விளையாடி வருகின்றது.
தகுதிச் சுற்றின் முதல் போட்டியிலேயே இந்தியாவை எதிர்கொண்ட அமெரிக்க அணி, சிறப்பாக பந்துவீசி இந்திய பேட்டர்களை திணறடித்தது. போராடி தோல்வியைச் சந்தித்த அமெரிக்க அணி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருவதாக தற்போதுதான் கேள்விப்பட்டேன்! அமெரிக்க அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! எங்களிடம் மிகவும் வலிமையான அணி உள்ளது. அமெரிக்கா முழுவதும் உங்களுக்கு ஆதரவளிக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியை நாளை இரவு நடைபெறவுள்ள போட்டியில் அமெரிக்கா எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
ஐபிஎல் 2026 அலசல்: கோப்பை தாகத்தை தீர்க்குமா மும்பை இந்தியன்ஸ் அணி?
“சஞ்சு சாம்சன் வந்துவிட்டார்… தோனி ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” – ஆகாஷ் சோப்ரா
மறக்க முடியுமா? – விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள் – கதறவிட்ட தோனி படை