October 26, 2026

கட்டாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை 

கரூர்அக்:26 

 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கட்டாரப் பட்டி  அரசு உயர்நிலைப் பள்ளியில் 192 மாணவ மாணவிகள்  பயின்று வருகின்றனர். இங்கு போர்வெல்  மூலம் குடிநீர்  உப்புத்தன்மை இருப்பதால் மாணவ மாணவிகள் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் பாதையானது சுமார் 4 அடி அகலம் மட்டுமே இருப்பதால் சைக்கிள் செல்வதற்கு போதுமானதாக இல்லை.இதில்  மழை நீர் தேங்குகிறது.  பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால்  குடிமகன்கள்  அட்டகாசம் தொடர்கிறது.பள்ளிகாகு வரும் சாலை மண் சாலையாக இருப்பதால் தற்போது சேறும் சகதியுமாக உள்ளது.இதனால் மாணவர்கள் மூன்று கிமி தொலைவு சுற்றி வருகின்றனர்.எனவே மேற்கண்ட கோரிக்கை களை மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love