மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.அருண்ராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் (திருப்பூர் தெற்கு) எஸ்.பாலமுருகன் அவர்கள், (திருப்பூர் வடக்கு) திருமதி.வி.
சத்தியபாமா ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி அருகில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சாலைகள் திட்டத்தின் கீழ் திருப்பூர் – சோமனூர் செல்லும் சாலையிலிருந்து சிக்கண்ணா கல்லூரி செல்லும் சாலையில் ரூ.42.76 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் மற்றும் பொதுப்பணித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.,
மேலும், பொதுப்பணித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் பூலுவப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளயில் 16 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை மாண்புமிகு மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.அருண்ராஜ் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் .க.கார்த்திகேயன், கண்காணிப்புப் பொறியாளர், (நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்பு) திருமதி க.வத்சலா வித்யானந்தி, கோட்டப் பொறியாளர் எஸ். பாலசுப்ரமணியன், உதவிக்கோட்டப் பொறியாளர்கள் (திருப்பூர் வடக்கு) திருமதி ச.கவிதா, (திருப்பூர் தெற்கு) பொ.சுரேஷ். உதவிப் பொறியாளர் (திருப்பூர் வடக்கு பிரிவு-1) ப.ஜெயப்
பிரகாஷ், (திருப்பூர் வடக்கு பிரிவு-2) எம்.வனஜா, ( திருப்பூர் தெற்கு து. ரமண்கிஷோர் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மூமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா
கட்டாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
கரூர்மாவட்டம்