மும்பை: மும்பையில் வறுமை காரணமாக சைக்கிளில் சென்று டெலிவரி செய்து வந்த ‘பிளிங்கிட்’ டெலிவரி ஊழியர் ஒருவருக்கு, மும்பையைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலம் ஹுசைன் மன்சூரி புதிய ஸ்கூட்டரை பரிசளித்தார்.
இது தொடர்பான நெகிழ்ச்சியான வீடியோவை ஹுசைன் மன்சூரி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், ”டெலிவரி ஊழியர் (சுஜீத்) ஒரு ஆர்டரை டெலிவரி செய்ய சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மன்சூரி அவரை வழிமறித்து பேசுகிறார். அவரிடம் ஏன் இன்னும் மோட்டார் சைக்கிள் வாங்கவில்லை? என கேட்கிறார். அதற்கு சுஜீத், “சார், இவ்வளவு குறைந்த வருமானத்தில் என்னால் எப்படி ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க முடியும்” எனக் கூறுகிறார்.
அதன் பிறகு மன்சூரி, டெலிவரியை முடித்துவிட்டுத் திரும்பி வாருங்கள் என சுஜீத்திடம் தெரிவிக்கிறார். அதன்படி அவர் திரும்பி வந்ததும், மன்சூரி அவரது கண்களைக் கட்டி அழைத்துச் சென்று, இது ஆனந்த் அம்பானியின் சிறிய பரிசு எனக்கூறி புதிய ஸ்கூட்டரை அவருக்கு பரிசளிக்கிறார். இதைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சுஜீத், மன்சூரியைக் கட்டிப்பிடித்துக் ஆனந்தக் கண்ணீர்விட்டபடி, அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்.
இந்த வீடியோவை 4.6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது. தொழிலதிபர் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆனந்த் சேவா அறக்கட்டளை சமூக வலைத்தள பிரபலங்களாக ரஹூல் கனல் மற்றும் ஹுசைன் மன்சூரி ஆகியோருடன் இணைந்து மும்பையைத் தினமும் இயங்க வைக்க உதவும் அதன் கடின உழைப்பாளிகளுக்கு மின்சார ஸ்கூட்டர்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More Stories
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை
பிளிங்கிட் தளத்தில் வெறும் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரூ.3 லட்சம் விலையுள்ள ஐபோன் டியோ
1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களுடன் வரலாறு படைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ