October 30, 2026

விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம்: கட்கரி

புதுடெல்லி: விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்​லும் வாக​னங்​களுக்கு வேகக் கட்​டுப்​பாட்டு விதி​மீறல் அபராதம் விதிக்க வேண்​டாம் என்று அதி​காரி​களுக்கு அறிவுறுத்தி​யுள்​ள​தாக, மத்​திய அமைச்​சர் நிதின் கட்கரி தெரிவித்துள்​ளார்.

டெல்​லி​யில் நடை​பெற்ற இந்​தி​யாவின் நெடுஞ்​சாலைகளின் எதிர்காலம் குறித்த இந்​தி​யத் தொழில்​துறை கூட்​டமைப்​பின் (சிஐஐ) நிகழ்ச்​சி​யில், மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைகள் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி பங்​கேற்று பேசிய​தாவது: டெல்லி – மும்பை விரைவுச் சாலை உள்​ளிட்ட சாலைகளில் தற்​போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வேகவரம்பு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

எனினும், சிலருக்கு வேக​மாக வாக​னம் ஓட்​டிய​தாகக் கூறி சாலையில் அபராத நோட்​டீஸ்​கள் அனுப்​பப்​படு​கின்​றன. மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்​லும் வாக​னங்​களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்​டாம் என்று நான் அறி​வுறுத்​தி​யுள்​ளேன். அதற்கு மேல் சென்​றாலும், அனுமதிக்​கப்​பட்ட வேகத்​தைவிட 20 சதவீதம் வரை அதி​க​மாகச் சென்​றால் விட்​டுவிடுங்​கள். அதையும் தாண்டி வேக​மாகச் சென்​றால் அபராதம் விதி​யுங்​கள் என அதிகாரி​களுக்கு அறி​வுறுத்தி உள்​ளேன்.

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) அடிப்​படை​யி​லான மேம்​பட்ட போக்கு​வரத்து மேலாண்மை அமைப்பை செயல்​படுத்த தொழில்​துறை​யினர் ஆதரவளிக்க வேண்​டும். இந்​தத் தொழில்​நுட்​பத்​தின் மூலம், வாக​னங்​கள் உரிய பாதையில் செல்​லாதது உள்​ளிட்ட போக்​கு​வரத்து விதி​மீறல்​களைக் கண்​டறிய முடியும். மேலும், இந்தி​யாவில் விரிவடைந்து வரும் நெடுஞ்​சாலை வலை​யமைப்பு முழு​வதும் போக்​கு​வரத்து விதி​களைச் சிறப்​பாக அமல்​படுத்​தவும் இது உதவும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறினார்.

Spread the love